Connect with us

தமிழக அரசின் பாரத் நெட் திட்ட டெண்டர்கள் ரத்து: மத்திய அரசு அதிரடி

செய்திகள்

தமிழக அரசின் பாரத் நெட் திட்ட டெண்டர்கள் ரத்து: மத்திய அரசு அதிரடி

கிராமங்களுக்கு அதிவேக இணையதள சேவை அளிக்கும் தமிழக அரசின் பாரத் நெட் திட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக அரசின் பாரத் நெட் திட்டத்தில் டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் சற்றுமுன் மத்திய அரசு இந்த ரத்துஅறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக ரூ.1950 கோடியில் 12,524 கிராம ஊராட்சிகளை ஃபைபர் கேபிள் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தொடர்ச்சியாக அளித்து வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மத்திய வர்த்தக அமைச்சகம் இதுகுறித்து விசாரணை செய்த நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த திட்டம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியபோது, ‘தமிழகத்தில், 12 ஆயிரத்து, 542 ஊராட்சிகளுக்கு, இணையதள வசதி அளித்து, தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்த, ‘பாரத் நெட்’ திட்டம் உதவும். இத்திட்டம், தமிழகத்திற்கான வரப்பிரசாதம்.எனவே, இத்திட்டத்தை ஆரம்ப நிலையிலே எதிர்க்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் செய்த சூழ்ச்சிக்கு, நீதிமன்றத்தில் அவர்களுக்கு தோல்வி கிடைத்துள்ளது. அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கும் நிலையில் உள்ளனர். இப்படி இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி சொல்வதே, அவர்களுக்கு வழக்கமாக உள்ளது’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top