Connect with us

ரூ.2000 கோடி திடீரென ஒதுக்கிய மத்திய அரசு: எதற்காக தெரியுமா?

செய்திகள்

ரூ.2000 கோடி திடீரென ஒதுக்கிய மத்திய அரசு: எதற்காக தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,40,215 உயர்ந்துள்ளது என்பதும், அதேபோல் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸை இந்தியாவில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்தியாவிலேயே வென்டிலேட்டர் தயாரிக்கப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக் கப்பட்டுள்ளது

பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வென்டிலேட்டர் தயாரிக்க ரூபாய் 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பணத்தில் இந்தியாவிலேயே சுமார் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே இருக்கும் நிலையில் வென்டிலேட்டர் தேவைகள் அதிகமாகும் என்றும் இதனை சமாளிக்க தயாராக இருக்கும் வகையில் இந்தியாவிலேயே 50,000 வென்டிலேட்டர் தயாரிக்க மத்திய அரசு பணம் ஒதுக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்தியாவிலேயே வென்டிலேட்டர் தயாரித்தால் கொரோனா வைரஸ் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர்கள் பயன்படுத்துவதன் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top