Connect with us

ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? பரபரப்பு தகவல்

செய்திகள்

ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? பரபரப்பு தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது

ஜூலை மாதத்திற்குள் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து விடும் என்ற நம்பிக்கையில் இந்த தேதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்று சந்தேகம் எழுந்து உள்ளது.

இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ள சிபிஎஸ்சி தேர்தல் தொடர்பாக நாளை மாலைக்குள் முடிவு செய்ய இருப்பதாக சிபிஎஸ்சி உச்சநீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது

இந்த நிலையில் ஐசிஎஸ் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே நாளை சிபிஎஸ்சி தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top