Connect with us

கார் திருட்டு… ஓட்டுனருக்கு கத்திக் குத்து….

செய்திகள்

கார் திருட்டு… ஓட்டுனருக்கு கத்திக் குத்து….

வாடகைக்கு என காரை வரவழைத்து காரைதிருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் தனியார் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். வசந்தகுமாருக்கு இன்று அதிகாலை 2.30 மணியளவில் வாடகைக்கு கார் வேண்டி அழைப்பு வந்துள்ளது. இதனை அடுத்து வசந்தகுமார் திருச்சி சாலையில் இரண்டு இளைஞர்களை அழைத்து சென்று கொண்டிருந்தார்.

கார் திருட்டு... ஓட்டுனருக்கு கத்திக் குத்து....

அப்போது சூளூர் எஸ்.பி.ஐ வங்கியின் எடிம் அருகே வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளனர். வசந்தகுமாரும் காரை நிறுத்தியுள்ளார். அந்த இரு இளைஞர்களும் வசந்தகுமாரை கத்தியால் சரமாரியாக வெட்டியதுடன், அங்கிருந்து காரை திருடிச் சென்றுள்ளனர்.

வசந்தகுமாரை அங்கிருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வசந்தகுமார் போலீஸ்சாரிடம் அனைத்து தகவல்களையும் காரின் பதிவு எண்ணையும் கூறியுள்ளார்.

திருப்பூர் அருகே காரையும் அதில் ஒரு நபருடன்  போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் இரு இளைஞர்களும் அந்தமான் தீவினை சேர்ந்தவர்கள் என்றும் பெயர் திருமுருகன், கொங்குசாமி எனவும் தெரியவந்தது. இதில் காரையும் திருமுருகனையும் மட்டுமே கைது செய்துள்ளனர். கொங்குசாமியை போலீசார் தேடி வருகின்றனர். அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு கொங்குசாமியை தேடி வருகின்றனர்.

இது போல் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது வழக்கமாக உள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top