கேக் கட் செய்து மகிழ்ந்த கொலைகாரன் டீம்

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புலி வருது கதையாக இழுத்துக்கொண்டிருந்த கொலைகாரன் படம் ஒரு வழியாக கடந்த வாரம் வந்தே விட்டது. வித்தியாசமான கில்லராக விஜய் ஆண்டனி நடித்துள்ள இப்படத்தில் அர்ஜூன் சிறப்பு காவல்துறை விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார்.

ஆண்ட்ரு லூயிஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த வாரம் வெளியாகி காட்சிக்கு காட்சி சீட்டின் நுனிக்கு வரவைக்கும் அளவு மிக அழகாக நேர்த்தியாக தான் நினைத்ததை சஸ்பென்ஸாக திரைக்கு கொண்டு வந்துள்ளார் கொலைகாரன் பட இயக்குனர் ஆண்ட்ரு.

இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடந்தது இதில் கொலைகாரன் பட டீம் கேக் கட் செய்து மகிழ்ந்தது.