அபிராமி, முகின் காதலில் பிரேக் –அப் ..!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படு சரிவினைச் சந்தித்தது.

தயாரிப்புக் குழு பல வகையில் முயன்ற பின்னும் டிஆர்பி ஏறியதாகத் தெரியவில்லை. போட்டியாளர்களுக்கும் சண்டையை மூட்டிய பின்னும், கவின்- சாக்சி காதல் ப்ரேக் அப், கஸ்தூரி வைல்டு கார்டு என்ட்ரி என பலவித முயற்சிகள் செய்த பின்னும் சரிவிலிருந்து மீள முடியாமல் தவித்தது.

அபிராமி, முகின் காதலில் பிரேக் –அப் ..!

அதனை ஈடுகட்டவே வனிதாவை வீட்டிற்குள் அனுப்பி உள்ளது தயாரிப்புக் குழு.

வனிதா கவின் லாஸ்லியா நட்பினைப் பற்றி வறுத்தெடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது அபிராமி- முகின் ப்ரேக் அப்.

வனிதா வந்த வேலையை விட்டுவிட்டு அபிராமி முகின் பிரச்சினையை பேசியிருக்க வேண்டியதில்லை என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லேசாக ஆரம்பித்த இந்தப் பேச்சானது, மிக அதிக அளவு எமோசனலான விஷயமாக முடிந்தது. மதுமிதா எமொசனலான கேள்விகளைக் கேட்டார், அதனை ஆமோதிக்கும் விதமாக, சேரனும் பேசினார்.

ஆனால் கடைசி வரை புரிந்துகொள்ளாத முகின், கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

இறுதியில் அபிராமி முகின் மீது கொண்டிருந்த, காதலை ப்ரேக் அப் செய்துவிட்டார். நேற்றைய எபிசோடு முழுமையும் சண்டைக் களமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.