போஸ் வெங்கட் இயக்கும் கன்னி மாடம்

போஸ் வெங்கட்டை தெரியாதோர் இருக்க முடியாது. முதன் முதலில் சென்னைக்கு வந்து ஆட்டோதான் ஓட்டினாராம். பின்பு சீரியல்களில் நல்ல பெயர் சொல்லும் அளவு கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார் இவர்.

பின்பு சினிமாவிலும் பிஸியானார், ரஜினிகாந்த உட்பட முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள போஸ் வெங்கட், வில்லன், குணச்சித்திர வேடங்களில் கலந்து நடித்துள்ளார்.

சீரியல்களிலும், சினிமாக்களிலும் நடித்து வந்த நடிகை சோனியாவை மணமுடித்துள்ள போஸ் வெங்கட் , முதன் முறையாக கன்னி மாடம் என்ற படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யாவை வைத்து நேற்று வெளியிட்டுள்ளார்.