Connect with us

போனிகபூரை அடுத்து அமீர்கான் வீட்டிற்குள்ளும் சென்ற கொரோனா வைரஸ்!

செய்திகள்

போனிகபூரை அடுத்து அமீர்கான் வீட்டிற்குள்ளும் சென்ற கொரோனா வைரஸ்!

அஜித்தின் ’வலிமை’ உள்பட பல பிரபல படங்களை தயாரித்து வரும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரின் ஊழியர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து போனிகபூரும் அவருடைய மகள்களும் கொரனோ வைரஸ் பரிசோதனை செய்து கொண்டனர் என்பதும், அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்தது என்பதால் நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் போனிகபூரை அடுத்து அமீர் கான் வீட்டிற்குள்ளும் தற்போது கொரோனா புகுந்துவிட்டது. அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அமீர்கான் தனது டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: என் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றானர். மும்பை சுகாதார துறை அதிகாரிகள் அவர்களை தனிக்கவனம் செலுத்து சிகிச்சை தருகின்றனர். எனவே மும்பை சுகாதாரத்துறைக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் ஒருசில ஊழியர்களை தவிர வேறு யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது

என்னுடைய தாயாருக்கு செய்யப்பட்ட பரிசோதனையின் முடிவு மட்டும் இன்னும் வரவில்லை அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வரவேண்டும் என்று தயவுசெய்து அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று அமீர்கான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

Continue Reading
To Top