Connect with us

நாய்க்குட்டி திடீரென துள்ளியதால் பிஎம்டபிள்யூ கார் விபத்து: இளம்பெண் கைது

செய்திகள்

நாய்க்குட்டி திடீரென துள்ளியதால் பிஎம்டபிள்யூ கார் விபத்து: இளம்பெண் கைது

பிஎம்டபிள்யூ காரில் இருந்த நாய்க்குட்டி திடீரென துள்ளியதால் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த இளம்பெண் அதிர்ச்சியில் ஆக்சிலேட்டரை அழுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்

டெல்லியில் பிஎம்டபிள்யூ கார் லஜ்பத் நகர் என்ற பகுதியில் இரவு 10 மணிக்கு நின்று கொண்டிருந்தது. காரில் 29 வயது இளம்பெண் ஒருவரும் அவரது நாய்க்குட்டியும் மட்டும் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென எதிர்பாராத வகையில் நாய்க்குட்டி துள்ளியதால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், தெரியாமல் ஆக்சிலேட்டரை மிதித்துவிட்டார். இதனால் கார் திடீரென வேகமாக கிளம்பியது

அந்த பிஎம்டபிள்யூ கார் அந்த பகுதியில் இருந்த தள்ளுவண்டி உணவுக்கடை மற்றும் அந்த கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மீது மோதியது. இதனால் நான்கு பேர் படுகாயம் அடைந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
To Top