பாரதிய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும்- தமிழிசை

எப்பொழுதும் செய்திகளில் அடிபட்டு கொண்டிருப்பவர் பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை செளந்தராஜன் . சமூக வலைதளங்களில் இவருக்கு எதிராக காமெடி மீம்ஸ்கள் தயார் செய்ய ஒரு பெரும்படையே இயங்குகிறது.

இருப்பினும் சளைக்காமல் தன் கடமையை செய்து கொண்டு வருகிறார். சளைக்காமல் சிரித்த முகத்துடன் பேட்டி கொடுப்பதில் வல்லவர் இவர்.

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அதிரடியாக பேசி வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த தமிழிசை

தமிழகத்தில் பா.ஜ.க. சரியான கூட்டணியை அமைத்து அதிக இடங்களை கைப்பற்றும் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தி.மு.க.விற்கு எதிராக தமிழகத்தில் வலுவான கூட்டணியை பா.ஜ.க. அமைக்கும் என்றார்.