டிக் டாக் பிரபலத்துக்கு எம்.எல். ஏ சீட் கொடுத்த பாஜக

சோனாலி பெகத் ஹரியானவை சேர்ந்த இவர் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர். டிக் டாக் செயலிக்கு தீவிர எதிர்ப்புகள் தமிழ்நாட்டில் வலுத்து வரும் நிலையில் ஹரியானாவில் இந்த பெண்ணுக்கு எம்.எல். ஏ சீட்டே தேடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் பாஜக சார்பில் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் என்ற தொகுதியில் போட்டியிட இருக்கிறார் இங்கு எம். எல் ஏ ஆக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த குல்தீப் பிஷ்னாய்.

சோனாலி பொகத் ஹரியானாவில் டிக் டாக்கில் பிரபலமானவர் ஆவார்

இவரது ரசிகர்கள்தான்இவர் சீட் பெற காரணமாம். இவர் தேர்தலில் நிற்க வேண்டும் என இவரது டிக் டாக் ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு மெசேஜ் செய்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பாஜக தலைமைக்கு செய்தியை தொடர்ந்து அனுப்பி இவருக்கு சீட்டும் வாங்கி கொடுத்து விட்டனர்.

டிக் டாக் மூலம் எல்லாம் எம்.எல். ஏ ஆனா ஆச்சரியம்தான்.