Connect with us

அதிமுக பாஜக வலிமையான கூட்டணி- ஹெச் ராஜா

செய்திகள்

அதிமுக பாஜக வலிமையான கூட்டணி- ஹெச் ராஜா

மீண்டும் மோடியை பிரதமராக்கக் கோரி சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பாஜக சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா பேரணியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: கட்சி முடிவு செய்தால் மக்க ளவைத் தேர்தலில் போட்டி யிடுவேன். அதிமுக, பாஜக கூட்டணி மிக வலிமையான கூட் டணி. கடந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 19.5 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. எங்களை விட திமுக கூட்டணிக்கு 2 சதவீத வாக்குகள் தான் கூடுதலாகக்கிடைத்தன.

எனவே, கடந்த தேர்தலில் முதலிடத்தில் வந்த அதிமுகவோடு, மூன்றாம் இடம் பிடித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி மிக வலி மையான கூட்டணியை அமைத் துள்ளது. இதில் மதிமுக மட்டுமே வெளியே உள்ளது. அது ஜீரோ கட்சி. அதனால் எங்களுக்கு பாதிப்பில்லை. எனவே, மகத்தான வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top