பாஜகவில் இணைந்த நெப்போலியன் என்ன ஆனார்

புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். தொடர்ந்து எஜமான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக அண்டித்து புகழ்பெற்றார்.

சீவலப்பேரி பாண்டி படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரும் புகழை அடைந்தார். அந்த படத்தில் ஹீரோவாக அதாவது நெல்லை வட்டாரப்பகுதியில் வாழ்ந்த சீவலப்பேரி பாண்டியாகவே வாழ்ந்து இருப்பார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதை குறைத்து திமுகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட துவங்கினார். எம்.பி, எம்.எல்.ஏ தேர்தல்களிலும் நின்று வெற்றி பெற்றார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய இணையமைச்சராகவும் பதவி வகித்தார். பின்பு திடீரென திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இவருக்கு முக்கிய பொறுப்பும் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் இவர் என்ன ஆனார் என தெரியவில்லை. அமெரிக்காவிலும் பல முக்கிய தொழில்களை செய்து வரும் நெப்போலியன் தேர்தல் நேரத்திலும் செய்திகளில் அடிபடாமல் அமைதியாக உள்ளது ஆச்சரியமாக உள்ளது.