பிகில் இன்று வெளியாகும் புதிய வீடியோ

விஜய் நடித்திருக்கும் படம் பிகில். இப்படத்தை எதிர்பார்த்து எண்ணற்ற விஜய் ரசிகர்கள் தவமாய் தவமிருந்து வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். எந்த தியேட்டரில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறதோ அந்த தியேட்டர் இருக்கும் திசையில்தான் தலைவைத்து கூட தூங்குவர் போலும்.

அந்த அளவு விஜய்யின் பிகில் பட அப்டேட்டை தினமும் எதிர்பார்த்து காத்துள்ளனர். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் தினமும் பிகில் அப்டேட் ஏதாவது வெளியிட்டுத்தான் வருகிறார்.

இன்றைய அப்டேட்டாக படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் லிரிக்கல் வீடியோ இரவு 7 மணிக்கு வெளியாகிறதாம். தளபதி ரசிகர்களே காத்திருங்கள்.