என்ன சொல்லுது பிகிலு- ரசிகர்களின் விமர்சனம்

விஜய் நடித்த பிகிலு திரைப்படம் தீபாவளியை ஒட்டி இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் பயங்கர வரவேற்பு அளித்து வருகின்றனர். இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு பின்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஸ்பெஷல் ஷோ பார்த்தவர்கள், அதிகாலையில் பார்த்தவர்கள் பலர் விமர்சனங்களை சொல்ல துவங்கி இருக்கின்றனர். நடிகை வரலட்சுமி பிகில் செம மாஸ் ஆக இருப்பதாகவும் டயலாக் எல்லாம் சூப்பராக இருப்பதாக கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகர் படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி செம மாஸ் ஆக இருப்பதாகவும் படத்தில் வரும் புட்பால் எபிசோட் மிக மாஸ் ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.