பிகிலை பாராட்டி தள்ளிய பாலிவுட் இயக்குனர்

பிகில் திரைப்படம் தீபாவளியை ஒட்டி கடந்த 25ம் தேதியன்று ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் மட்டுமே வருகிறது.

பெரும்பாலும் படத்தை பற்றிய எதிர்மறை கருத்துக்கள் விமர்சனங்கள் அதிகம் வந்துள்ள நிலையில் முதன் முதலாக பாஸிடிவாக ஒரு பெரிய இயக்குனரிடம் இருந்து வரவேற்பு கலந்த பாராட்டு கிடைத்துள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் இப்படத்தை பார்த்து விட்டு

என்ன ஒரு கொண்டாட்டமான திருவிழா பிகில் படம்! பரபரப்பும் உணர்வுபூர்வமான காட்சிகளும் கொண்ட படம். தளபதி விஜய் நல்ல ஃபார்மில் உள்ளார். அவருடன் இணைந்து விசில் அடிக்கத் தூண்டுகிறார்.

அவர் நடிப்பு அற்புதம். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்துள்ளார் அட்லி. சூப்பர் ஸ்டார் இயக்குநர் என்று பாராட்டியுள்ளார்.