பிகிலுக்காக ரகளை செய்து கைதான 18 பேர்-சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

கிருஷ்ணகிரியில் கடந்த 25ம் தேதி அதிகாலை காட்சியில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள தியேட்டரில் பிகில் படம் சீக்கிரம் ஒளிபரப்பவில்லையென விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

இது குறித்து போலீஸ் விசாரித்து வந்த நிலையில் படம் முடிந்து வெளிவந்ததுமே 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிறகு சிசிடிவி, மற்றும் வீடியோ பதிவுகள் சிலவற்றை கொண்டு மேலும் 18 சிறுவர்களை கண்டறிந்தனர். இவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால் இவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களில் 7 பேர் சீர்திருத்த பள்ளிக்கும், 11 பேர் ஜெயிலுக்கும் சென்றனர்

இவர்களை பார்த்து பெற்றோர் கண்ணீர் வடித்தது பரிதாபமாக இருந்தது.