பாலா படத்தில் குத்தாட்டம் ஆடும் பிக்பாஸ் நடிகை

நடிகையும் மாடலுமான ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த 'விஐபி 2' படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ’பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.

 raiza

நடிகையும் மாடலுமான ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ‘விஐபி 2’ படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ’பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் பாலா இயக்கி வரும் ‘வர்மா’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட ரைசா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒரே ஒரு பாடலில் நடனம் ஆடுவதற்காக ரைசாவுக்கு ஒரு பெரிய தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

raizaதெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘அர்ஜூன்ரெட்டி’ படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாகவும், கொல்கத்தாவை சேர்ந்த மேகா சௌத்ரி நாயகியாகவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.