அவங்க அவங்களா இல்லயா? கமல்ஹாசன் சொல்ல வருவது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சி 30 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஒருவர் கூட பார்வையாளர்களின் மனதை தொடவில்லை. இனியும் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சி 30 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஒருவர் கூட பார்வையாளர்களின் மனதை தொடவில்லை. இனியும் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை. சரி கமல்ஹாசன் தோன்றும் சனி, ஞாயிறாவது விறுவிறுப்பாக இருக்கும் என்று பார்த்தால் கமல்ஹாசனின் சுயபுராணம், தற்பெருமையிலேயே பாதி நேரம் போய்விடுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்களின் ஒரே பெரிய குறை அவங்க அவங்களாகவே இல்லை என்பதுதான். இதனை பார்வையாளர்கள் மட்டுமின்றி விருந்தினர்களாக சென்றவர்களும் கூறிவிட்டனர்.

இப்போது இந்த சந்தேகம் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் வந்துவிட்டது. எல்லோரும் ஓவியா போல் இருக்க வேண்டும் நடிக்க ஆரம்பித்ததால் உண்மையான சுயரூபம் இன்னும் வெளிவரவிலை. சரி இன்றைய புரமோவில் கமல் சொல்ல வருவது என்னவென்று இந்த வீடியோவில் பார்ப்போம்