50 வது நாளை சிறப்பு விருந்தினருடன் கொண்டாடிய பிக்பாஸ் குடும்பம்

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன் ஆகியோரைத் தொடர்ந்து சாக்ஷியும் வெளியேற்றப்பட்டுள்ளார்.


காலையில் குறைதீர் கூட்டம் முடிந்த பிறகு, இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது. அதில் கவின், லோஸ்லியா, அபிராமி, முகின் காதல் ஜோடிகள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மதுமிதாவும் இந்த முறை மீண்டும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 50 வது நாள் வந்த்தும் போதும் ஒரே கொண்டாட்டம்தான், அதில் மற்றுமொரு 50 வது நாள் வாரத்தில் சாண்டி தலைவராகப் பொறுப்பேற்றிருப்பதுதான்.

 நேற்று 50வது நாளை முன்னிட்டு போட்டியாளர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அனைவரும் ஆர்வமாக ஓடி வந்து உணவினை சாப்பிடத் தயாராகினர்.

அதில் சாண்டியும், கவினும் யாருக்கும் தெரியாமல் குலோம் ஜாமுனை திருடி சாப்பிட்டனர். 50 வது கொண்டாட்டத்திற்கு பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த மற்றொரு பரிசு, அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்படியாக இருந்தது.

அது யாருமல்ல நம்ம பிக் பாஸ் டிஆர்பி நாயகி வனிதாதான்.