சாண்டி மற்றும் சித்தப்புவை பிரித்த பிக் பாஸ்..

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கியதில் இருந்து, தன்னுடைய குறும்புத்தனம் மற்றும் கலகலப்பான பேச்சின் காரணமாக ரசிகர்களை அதிகம் கொண்டவராக உள்ள போட்டியாளர் சாண்டி.

நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும், தினமும் நடந்த நிகழ்வுகளை மெட்டில் இசையமைத்து பாடி சக போட்டியாளர்களை மகிழ்வித்து வருகிறார்.

சாண்டி, கவின் மற்றும் தர்ஷன் இணைந்து சில சமயங்களில் பாடுவார். இதுபோல பாடி போட்டியாளர்களை சண்டையை கேளி செய்வது, பிக்பாஸை கேளி செய்வது என்று அனைவரையும் குஷிப்படுத்துகிறார். இதனாலேயே இவருக்கு அதிக ரசிகர்களைக் கொண்டவராக உள்ளார்.


அந்த வகையில் இந்த சீசனுக்கான பிக்பாஸ் அந்தம் பாடலை, சாண்டி மற்றும் அவரது குழுவினர் பாடியுள்ளனர். இதுதொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அது பார்வையாளர்களிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. 

இதுவரை இந்த வீட்டில் எவ்வளவு சண்டைகள் நடைபெற்றாலும், அதனை காமெடியான போக்கில் கொண்டு செல்பவராக இருப்பவர் இவர் மட்டுமே.

குறிப்பாக சாண்டிக்கும் சித்தப்புக்கும் நெருங்கிய உறவு இருந்து வந்துள்ளது, ஆனால் நேற்றைய எபிசோடில், பிக் பாஸ் தன்னை சிறைக்கு செல்லச் சொன்னபோது, இவர் எதுவும் எதிர்த்து கேட்கவில்லை. இதனால் சித்தப்பு சாண்டியின் மீது கடும் கோபத்தில் உள்ளார் என்று தெரிகிறது.