Connect with us

சரவணன் சண்டைப் போட்டதற்குக் காரணம் பிக் பாஸ் தான்!!

பொழுதுபோக்கு

சரவணன் சண்டைப் போட்டதற்குக் காரணம் பிக் பாஸ் தான்!!

பிக் பாஸ் வீட்டுக்குள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர் நடிகர் சரவணன். கடந்த 2007ம் ஆண்டு வெளியான ’பருத்திவீரன்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென இடம்பிடித்தவர் சரவணன். 

அந்த படத்தில் அவருடைய சித்தப்பு கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அப்படம் வந்து 12 ஆண்டுகள் ஆன பின்பும், இன்னும் அந்த பெயர் பிரபலமாகவுள்ளது. 

சரவணன் சண்டைப் போட்டதற்குக் காரணம் பிக் பாஸ் தான்!!


தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் அவரை தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.


பிக்பாஸ் சீசன் 3 தொடங்கியதில் இருந்தே அமைதியாக இருந்து வந்தார் சித்தப்பு. ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களிடம் அவர் கோபமாக பேசினார். 

வேலையே செய்யவில்லை என்று நீங்கள் எப்படி சொல்லலாம். நான் அனைவரிடமும் நட்பாகத்தான் பழகுகிறேன். எல்லோரும் சித்தப்பூ என்று என்னை அழைக்கிறீர்கள். இனி யாரும் என்னுடன் பேச வேண்டாம், இல்ளையேல் அசிங்கப்பட்டு போவீர்கள் என்று மிகவும் கோபமாக சரவணன் பேசினார். 

ஆனால் அவர் தானாக இப்படி பேசி இருக்கமாட்டார் என்றும், பிக் பாஸ் தான் இதற்கு காரணம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top