Connect with us

சேரன் விஷயத்தில் பாரபட்சம் பார்க்கும் பிக் பாஸ்!!

பொழுதுபோக்கு

சேரன் விஷயத்தில் பாரபட்சம் பார்க்கும் பிக் பாஸ்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் முந்தைய சீசன்களைவிட, எளிதில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட இந்த சீசன் டிஆர்பியானது ஏறியும் இறங்கியதுமாகவே உள்ளது. ஒரு நிலைப்பாட்டுடன் இருக்கவில்லை என்பதே இந்த நிகழ்ச்சியில் உள்ள சொதப்பல்களைக் காட்டுகிறது.

சாண்டியும், கவினும் சேரப்பா நீ பேசினால் கொஞ்சம் போரப்பா என்று பாட்டுப் பாடியபோது வருத்தமானார் சேரன். மறுநாள் சாண்டி மற்றும் கவினுடன் இந்த விஷயம் தனக்கு வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்தார்.

அதனால் கவின், சாண்டி இருவரும் சேரனிடம் மன்னிப்பு கேட்டனர். வார இறுதியில் சேரன் இவ்வாறு செய்தது தவறு என்று கூறினார் கமல் ஹாசன், சேரனும் இதற்கு மன்னிப்புக் கேட்டார். இது சரியான விஷயமே ஆகும்.

ஆனால் சேரன் செய்தது தவறு என்று சுட்டிக் காட்டிய கமல் ஹாசன் கவின் பண்ணும் மிக மோசமான விஷயங்களை சுட்டிக் காட்டத் தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த தவறை கமல்ஹாசன் சுட்டிக் காட்டிய போதும், சேரன் சாண்டி,கவினுடன் இது பற்றி பேசி வருத்தம் தெரிவிக்கவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top