நவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை எங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலா

புரட்டாசி மாதம் நவராத்திரி வருகிறது. இந்த நாட்களில் அம்மன், லட்சுமி, பார்வதி, துர்க்கை , வராஹி, சரஸ்வதி என எல்லா அம்பிகையையும் வணங்கலாம். பலர் வீட்டில் கொலு வைத்து பூஜை செய்வார்கள் சில நாட்களுக்கு முன்பிருந்தே வீட்டை பூஜையறையை சுத்தம் செய்து கொலு வைத்து கொண்டாடுவார்கள்.

fa2df17fd3cf075c839c4746b0daebfd-1

பலருக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலை அமையாது. அலுவல் மற்றும் வீட்டு சூழ்நிலையால் அம்பிகைக்கு கொலு வைத்து பத்து நாட்களும் சரியான பூஜையை செய்ய முடியாது.

இவர்கள் தினமும் ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கோ பெருமாள் கோவிலுக்கோ சென்றோ அங்கு அம்மனையோ , பெருமாள் கோவில்களில் தாயார் சன்னதியில் தாயரையோ வழிபடலாம்.

நவராத்திரி முழுவதும் வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் சக்தி வாய்ந்த அம்மன் ஆலயங்களுக்கு தினமும் சென்று அம்மனின் அருட்கடாட்ஷத்தை பெறலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews