Connect with us

புதுச்சேரி அரசால் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட பரியேறும் பெருமாள்

பொழுதுபோக்கு

புதுச்சேரி அரசால் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட பரியேறும் பெருமாள்

கபாலி, காலா படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் வெளிவந்தது. மாரி செல்வராஜ் என்ற இயக்குனர் இயக்கி இருந்தார்.

அப்போதே இந்த படம் சிறந்த படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இப்படத்துக்கு  2018ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்படுகிறது. இப்படத்துக்காக சங்கரதாஸ் சுவாமிகள் விருதை இயக்குனர் மாரி செல்வராஜ் முதல்வர் கையால் பெறுகிறார் . விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ஒரு லட்சம் ரொக்கப்பரிசும் விழாவில் தரப்படுகிறது. அன்றைய தினம் மாலை இத்திரைப்படத்தையும் இலவசமாக பார்க்கலாம்.

வரும் 13ம் தேதி இவ்விருது வழங்கப்படுகிறது.

புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை இப்படத்தை அங்குள்ள முருகா தியேட்டரில் ஸ்பெஷலாக திரையிட்டுள்ளது வரும் 13ம் தேதியன்று இப்படத்தை அனைவரும் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top