பவதாரிணியின் புதிய ஆல்பம்- தந்தையை சந்தித்து ஆசி பெற்றார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி. குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே பாடி வரும் பவதாரணி இளையராஜா இசையமைத்த பல படங்களுக்கு பாடியுள்ளார்.

இவர் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

அழகி, உட்பட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பவதாரணி ராக் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு இன்ஸ்ட்ரூமெண்டல் ஆல்பம் தயார் செய்துள்ளார்.

ஜாஸ் மீ அப் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் புண்யா ஸ்ரீனிவாஸ் இணைந்து பாடியுள்ளார்.

இந்த இன்ஸ்ட்ரூமெண்டல் சிங்கிள் வெளியிடப்பட்டதை ஒட்டி தனது தந்தை இளையராஜாவிடம் ஆசி பெற்றுள்ளார் பவா.