தமிழ் ராக்கர்ஸ் நிறுவனத்துக்கு தடை- டெல்லி கோர்ட் அதிரடி

தமிழ் சினிமா உட்பட பல திரைப்படங்கள் வெளியான உடன் உடனே அதை இண்டர்நெட்டில் வெளியிடுவது தமிழ் ராக்கர்ஸின் பாணி. இதை திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில் இதை தமிழ் ராக்கர்ஸ் நிறுத்துவதாக இல்லை.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் தமிழ் ராக்கர்ஸால் தங்கள் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இதை ஏற்ற டெல்லி நீதிமன்றம் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனத்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் யார் தடை செய்தாலும் இந்நிறுவனத்தை கண்டுபிடித்து அழிப்பது என்பது சவாலான காரியமாகத்தான் உள்ளது.