Connect with us

போராடிய வங்கதேச வீரர்கள்… ரன் மழையால் வெளுத்து வாங்கிய இந்தியா.. !!

விளையாட்டு

போராடிய வங்கதேச வீரர்கள்… ரன் மழையால் வெளுத்து வாங்கிய இந்தியா.. !!

இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய வங்கதேச அணி மளமளவென விக்கெட்டுகளை தாரை வார்த்து, 58.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 150 ரன்கள் படுத்தே விட்டது.

இந்திய அணியில் மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 6 ரன்கள் அவுட் ஆகி ஷாக் கொடுத்தார்.

இந்தியா முதல் இன்னிங்சில் முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது. ரகானே 43 ரன்னுடனும், மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

போராடிய வங்கதேச வீரர்கள்… ரன் மழையால் வெளுத்து வாங்கிய இந்தியா.. !!

2 வது நாளாக நடைபெற்ற ஆட்டத்தில் புஜாரா 54 ரன்களில் வெளியேறினார். கேப்டன் கோலி  இந்த தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்த்திருக்க டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

ரகானே 86 ரன்களில் வெளியேறினார். மயங்க் சும்மா வெளாசு வெளாசுன்னு வெளாசி, எதிரணிக்கு தண்ணி காட்டினார் இறுதியில் இரட்டை சதத்தை பூர்த்தி செய்து 243 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து சகா 12 ரன்னில் அவுட் ஆனார். இந்தியா 2வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்தது.

அடுத்த நாள் இந்திய அணி டிக்ளர் செய்தது. இரண்டாம் இன்னிங்க்ஸில் வங்கதேச அணி வீரர்கள் நெருக்கடியுடன் எப்படியாவது அதிக ரன்களைக் குவிக்க வேண்டும் என்று ஆடினர்.

அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 64 ரன்களும், லிட்டன் தாஸ் 35 ரன்களும், மெஹிதி ஹாசன் 38 ரன்களும் எடுத்தனர். இறுதியில் வங்கதேச அணி 69.2 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, மேலும் டெஸ்ட் தொடரில் 1 – 0 என முன்னிலையில் உள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top