Connect with us

அசரவைத்த வங்காளதேசத்தின் ஆட்டம்.. வாய்ப்பினை கோட்டைவிட்ட இந்தியா!!!

விளையாட்டு

அசரவைத்த வங்காளதேசத்தின் ஆட்டம்.. வாய்ப்பினை கோட்டைவிட்ட இந்தியா!!!

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாடி வருகிறது.

இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

அசரவைத்த வங்காளதேசத்தின் ஆட்டம்.. வாய்ப்பினை கோட்டைவிட்ட இந்தியா!!!

 வங்காளதேச அணி டாஸ் வென்றது, வங்காளதேச கேப்டன் மக்முதுல்லா பந்துவீச்சினைத் தேர்வு செய்தார். இதன்படி இந்தியா பேட்டிங்க் செய்வதற்கு ஆயத்தமானது.


தற்காலிக கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்திய அணியினைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

சாதனை நாயகனாக வலம் வரும் கேப்டன் ரோகித் சர்மா துவக்க ஆட்டத்தில் குறைந்தபட்சம் சதத்தைப் பூர்த்தி செய்வார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் ரோகித், எல்.பி.டபிள்யூ. ஆகி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். அதாவது 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து ராகுல் 15 ரன்னில் அவுட் ஆனார்.

ஸ்ரேயாஸ் அய்யர் 2 சிக்சர்களை விளாசி அணிக்கு நம்பிக்கை சேர்த்தார், ஆனாலும் அவர் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆகிப் போனார்.

அடுத்து ஷிகர் தவான், ரிஷாப் பண்ட் ஜோடி இணைந்து ஆடத்துவங்க, அணி வெற்றிப் பாதையினை நோக்கி நகரும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

அதன்படி ஷிகர் தவான் 41 ரன்னிலும் ஷிவம் துபே 1 ரன்னிலும், ரிஷாப் பண்ட் 27 ரன்னிலும் அவுட் ஆகினர்.

முடிவில் 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. குருணல் பாண்ட்யா 15 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


அடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடியது வங்காளதேச அணி. லிட்டான் தாசின் 7 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய முகமது நைமும், சவுமியா சர்காரும் எதிர்பார்க்காததைவிட சிறப்பாக ஆடி அதிர்ச்சி அளித்தனர்.

 சவுமியா சர்கார் 39 ரன்களில் கிளன் போல்டு ஆனார், அடுத்து கேப்டன் மக்முதுல்லா களம் இறங்கினார்.

அதிரடியாக ஆடிய வங்காளதேச அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது, இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.

முஷ்பிகுர் ரஹிம் 60 ரன்களுடனும், மக்முதுல்லா 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top