பிளாஸ்டிக் தடை விளம்பரம்- விவேக்கை கலாய்த்த ரசிகர்கள்

தமிழக அரசு நேற்று முன் தினமான ஜனவரி 1 முதல் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. யாரும் பிளாஸ்டிக் கேரி பேக்ஸ் பயன்படுத்த தடை விதித்துள்ளது. கடைகளில் இந்த தடை உள்ளதால் ப்ளாஸ்டிக் பைகள் தர மறுக்கப்படுகின்றன.

இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விழிப்புணர்வு விளம்பரம் ஒன்று வந்துள்ளது, அதில் விவேக், ராம்கி, வரலட்சுமி போன்றோர் பங்கேற்று இந்த ப்ளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து பேசுகின்றனர்.

இதை குறிப்பிட்ட ரசிகர் ஒருவர் விவேக்கை எல்லாம் வைத்து விளம்பரம் எடுக்காதிங்க அஜீத், விஜயை வைத்து எடுங்க அப்போதான் ரீச் ஆகும் என்றிருக்கிறார்.

அதை பார்த்த விவேக்கும் இவர் சொல்வது சரிதான் என்று டுவிட் செய்துள்ளார்.