கலைத்துறையில் பிரகாசிக்க வைக்கும் பாலா அம்பிகை – நவராத்திரி திருவிழா

சுண்டு விரல் அளவு அம்மன், குசஸ்தலை ஆற்றில் தோன்றியவள், அடியாரின் வீட்டையே ஆலயமாக்கிக் கொண்ட அன்னை, என பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குபவள். வேலுர் மாவட்டம் நெமிலியில் பாலா அம்பிகை அருள்புரிகிறாள்.

7d3f6d3c694b4cd2b034e6e9422e8715-1

இவள் குழந்தை வடிவானவள் இவளை குழந்தைகள் வணங்கினால் குழந்தைகளுக்கு அனைத்து ஞானங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

கல்விக்கு உகந்தவள் மட்டுமல்லாது, சங்கீதம், ஸாரீரம் என இசை ஞானத்தையும் அதிகம் வழங்குபவள் இந்த பாலா அம்பிகை.

பல நூறு வருடங்களுக்கு முன் குசஸ்தலை ஆற்றில் நான் மிதந்து வருவேன் என ஒருவருக்கு கனவில் அசரீரி போல சொல்ல அதை ஏற்று அவரும் தேட இந்த சிறிய சிலையை கண்டெடுத்து இருக்கிறார்.

அதன் பின் அவர் வீட்டிலேயே வைத்து வழிபட இன்று வரை அவர் வீட்டிலேயேதான் வழிபாடு நடக்கிறது சிலையை கண்டெடுத்தவரின் வம்சா வழியினர்தான் இந்த கோவில் வழிபாட்டு விஷயங்களை கவனித்து கோவில் போன்ற அமைப்பு அல்லாது வீட்டிலேயே வழிபாடு நடக்கிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வணங்கி செல்கின்றனர்.

ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இசைத்துறை சார்ந்த பிரபலங்கள் பலரும் இங்கு வந்து குட்டி சிறுமியாக காட்சி அளிக்கும் பாலா அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews