பக்ரீத் பட இயக்குனரின் மனித நேயம்

கோழியை சிக்கனாகவும் ஆடுவை மட்டனாகவும் பார்ப்பதே இங்கு உள்ளது என உணர்வுப்பூர்வமாக பக்ரீத் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் விரைவில் வர இருக்கும் படம் பக்ரீத். நம் மண்ணுக்கு சரி வராத ஒட்டகத்தையும் அதை வளர்க்க முயற்சி செய்யும் ஹீரோவுக்கும் இடையிலான பாசப்பிணைப்பான கதையே பக்ரீத்.

பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும் வகையில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது. இரக்க உணர்வுடனும் விலங்குகளை மதிக்க வேண்டும் என்ற வகையில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

இது பற்றி இயக்குனர் ஜெகதீசன் கூறியது

கிராமத்துல பார்த்தீங்கன்னா ஒரு செடியோட கிளையைக் கூட அநாவசியமா உடைக்க மாட்டாங்க. நான் அடிப்படையில் கிராமத்துலேயிருந்து வந்ததுனால அந்த உணர்வை என்னால புரிஞ் சுக்க முடிஞ்சது. ‘புல் தரை மீது நடக்காதீர்கள்’, ‘பூக்களைப் பறிக் காதீர்கள்’ன்னு பலகையில் எழுதி வெச்சு நகரத்துப் பூங்காக்களில் பாதுகாக்கிற நிலைமைதான் இங்கே இருக்கு. ஆனா, கிராமத்துல அடுத்தவங்க வயல்னா கூட வரப்புலதான் நடந்து போவாங்க. செடி, கொடிகளை எல்லாம் ஒரு உயிரா பார்க்கிற, உணர்கிற மனசு விவசாயிகளுக்குதான் உண்டு.

அந்த மாதிரி அன்பும், நெகிழ்ச்சி யுமா மனைவி, மகள், விவசாயம்னு வாழ்ந்துட்டு இருக்கிற ஒருவனிடம் ஒட்டகம் கிடைக்கும்போது, அதை அவன் எப்படி எல்லாம் அக்கறையா பார்த்துக்கறான் எனபதே பக்ரீத் படத்தில் சொல்லப்பட்டிருப்பது என ஜெகதீசன் கூறியுள்ளார்.