எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவி ராஜினாமா வாபஸ்-பாக்யராஜ்

சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்யராஜ் ஒரு மாதம் முன்பு வரை இருந்து வந்தார்.

சர்க்கார் படத்தில் ஏற்பட்ட சில படத்தின் கதை தன்னுடையது என்று சொன்ன இயக்குனருக்காக பாக்யராஜ் ஆதரவு அளித்தது, எதிர்தரப்பில் சர்க்கார் பட இயக்குனர் முருகதாசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு விமர்சனம் வந்த நிலையில் பாக்யராஜ் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறினார். பலரும் வேண்டாம் என்ற நிலையில் பாக்யராஜ் அமைதி காத்து வந்தார்.

இந்நிலையில் 21 செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததாலும், தாம் பதவியில் தொடர வேண்டும் என்றும் இல்லையேல் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்ததாகவும் பாக்யராஜ் சுட்டிக்காட்டினார்.

எனவே, ராஜினாமாவை வாபஸ் பெற்று, மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும்,  இப்போது எழுத்தாளர் சங்கம் மீது பலருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது என்றும் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.