நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக இன்று ஆளுநரை சந்திக்கின்றனர் பாக்யராஜ் அணியினர்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நிலையில் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. தேர்தல் நடத்துவதில் பல குளறுபடிகள் உள்ளதால் தேர்தலை ரத்து செய்வதாக தென் சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது.

உடனே ஆளுநரிடம் அனுமதி வாங்கி ஆளுநரை நேரில் சந்தித்து விட்டு வந்தார் நடிகர் விஷால் இவர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி இடுகிறார்.

இந்நிலையில் நாசர் , விஷால் அணியை எதிர்த்து போட்டி இடும் பாக்யராஜ் , ஐசரி கணேஷ் தலைமையிலான அணி இன்று ஆளுநரை சந்திக்கிறது.