அயோக்யா ரிலீஸ் தேதி அறிவிப்பு

சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்துவரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன், இந்தப் படத்தை இயக்குகிறார். விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைக்கிறார். தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது என்று கூறப்படுகிறது.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம்.2019 ஜனவரி மாதமே வெளியாகும் என படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கூறப்பட்டது.

எனினும் சொன்னபடி படத்தை வெளியிட முடியாமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படம் வரும் மே 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/VishalKOfficial/status/1115250720653971456