Connect with us

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2018!

ராசி பலன்

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2018!

மேஷம் ஆகஸ்ட் மாதம் ராசி பலன்கள் 2018:

Mesham august month rasi palan 2018

அன்புள்ள மேஷம் ராசிக்காரர்களே, இந்த ஆகஸ்ட் மாதம் சாதுர்யமான பேச்சால் சாதித்து காட்டும் மாதம். நவகிரகங்களில் சுப கிரகமாக கருதப்படும் குரு உங்கள் ராசிக்கு 9, 12 அதிபதியானவர் உங்கள் ராசியை, பதினோராம் இடத்தை பார்ப்பாதல் எதிர்பார்த்த விதத்தில் மாற்றங்கள் நிகழும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வும் ஏற்படும். இதுவரை சரியான வேலை அமையவில்லையே என்று இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ர இயக்கத்தில் வலிமை இழந்து உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உடலில் ஏதேனும் சிறு உபாதை தென்பட்டாலும் மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த மாதத்தில் அதிகப்படியான வேலை சுமை இருக்கக்கூடும். ஆகஸ்ட் 3-ம் தேதி புதன் வக்ர நிவர்த்தியாவதால் வரவேண்டிய தொகை கைக்கு வரக்கூடும். கல்வி சம்மந்தமான முயற்சியில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட சிறு ஒற்றுமை குறைவு இப்பொழுது அகலும்.

ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கிறார்.  உங்கள் ராசிக்கு 2,7 அதிபதியான சுக்கிரன் நீச்சம் வீட்டில் இருப்பதால் பணவரவு சீராக வந்தாலும் அடுத்தடுத்து செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். வீடு பராமரிப்பு செலவு, வாகனம் பழுதாவது, மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சுக்கிரன் உங்கள் 7-ம் வீட்டிற்கு அதிபதி என்பதால் துணையின் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். ஆகஸ்ட் 8, 9 புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. ஆகஸ்ட் 14,15 எதிர்பாராத வகையில் வருமானம் வரக்கூடும்.

ரிஷபம் ஆகஸ்ட் மாதம் ராசி பலன்கள் 2018:

Rishabam august month rasi palan 2018

அன்புள்ள ரிஷபம் ராசிக்காரர்களே, இந்த ஆகஸ்ட் மாதம் கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது. அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றத்துடன் கூடிய சம்பளம் உயர்வு கிட்டும். அரசு சம்மந்தமான வேலையில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். குடும்ப சண்டையால் குழப்பத்திலிருந்தவர்களுக்கு இனி நிம்மதியான சூழல் ஏற்படும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இதுவரை நல்லவர் யார், கெட்டவர் யார் என்று தெரியாமல் இருந்தவர்கள் இனி அவர்களின் சுய ரூபத்தை கண்டு விலகி விடுவீர்கள்.

படிப்படியாக பல வாய்ப்புகள் வாசல் தேடி வரக்கூடும். ஆகஸ்ட் 3-ம் தேதி புதன் வக்ர நிவர்த்தியாவதால் தேவைக்கேற்ப பணவரவு வரக்கூடும். கல்வி சம்மந்தமாக எடுக்கின்ற முயற்சிகள் நல்ல விதமாக முடிவடையும். விலகிய சொந்த பந்தங்கள் மீண்டும் இணைவார்கள்.

உங்கள் குடும்பஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை புலப்படும். இல்லத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கடந்த சில மாதங்களாக பல வித இன்னல்களை சந்தித்து வந்தீர்கள், இனி அந்த நிலை மாறும்.

ஆகஸ்ட் 2-ம் தேதி கன்னி ராசிக்கு சுக்கிரன் சஞ்சரிப்பதால் நினைத்தது நினைத்தபடி முடிவடையாது. பல முறை முயற்சி செய்த பிறகு அந்த காரியம் முடிவு பெறும். வர வேண்டிய பணத்தொகை வருவதற்கு காலதாமதம் ஏற்படலாம். புதிய முதலீடு, முயற்சிகளில் ஈடுபடும் பொழுது அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கேட்டு கொண்டு செயல்படுங்கள். ஆகஸ்ட் 8,9 தேதிகளில் சந்திரனால் பணம் விரயம், தடை ஏற்படலாம். செவ்வாய் கேது இணைந்து இருப்பதால் குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

மிதுனம் ஆகஸ்ட் மாதம்  ராசி பலன்கள் 2018:

Mithunam august month rasi palan 2018

அன்புள்ள மிதுனம் ராசிக்காரர்களே, இந்த ஆகஸ்ட் மாதம் கனிவான பேச்சாலும், எதார்த்தமான முடிவுகளாலும் நினைத்ததை முடித்து காட்டும்  மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசியை குரு பார்ப்பாதல் இல்லத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படக்கூடும். இதுவரை உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். உங்கள் ராசிக்கு 6,11 அதிபதியான செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருப்பதால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வர வேண்டிய பாக்கி வசூலாகும்.

ஆகஸ்ட் 2-ம் தேதி கன்னி ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தடைகளும், தாமதங்களும், கவன சிதறல்களும் உருவாகலாம். அவ்வப்பொழுது பிள்ளைகளால் பிரச்சனை உண்டாகலாம். புதிய நண்பர்களால் வீண் பகை வரக்கூடும். மூன்றாம் நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். ஆகஸ்ட் 3, 4, 5-ல் உறவினர் வருகையால் ஏதேனும் நன்மை ஏற்படும். மிதுனம் ராசியினர் ஆகஸ்ட் மாதம் அடிக்கடி விருந்து, விழா என்று கலந்து கொள்வீர்கள். வீண் விரயங்கள் சுப விரயங்களாக மாறும்.

உங்கள் ராசிக்கு மற்றும் நான்காம் வீட்டிற்கு அதிபதியான புதன் பகவான் ஆகஸ்ட் 3-ம் தேதி வக்ர நிவர்த்தியாவதால் வருங்காலம் கருதி முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இதுவரை உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லையே என்று இருந்தவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். தொழில், வியாபாரத்தில் கணிசமான லாபம் வரக்கூடும். தாய்வழி ஆதரவு கிட்டும். கண்டச் சனி தொடர்ந்தாலும் வக்ர இயக்கத்தில் இருப்பதால் நன்மையையும், தீமையும் கலந்து தருவதாக அமையும். வக்ர சனியின் பார்வை உங்கள் ராசியின் மீது இருப்பதால் புதிய வாய்ப்புகள் வரக்கூடும்.

கடகம் ஆகஸ்ட் மாதம்  ராசி பலன்கள் 2018:

Viruchigam august month rasi palan 2018

அன்புள்ள கடகம் ராசிக்காரர்களே, இந்த ஆகஸ்ட் மாதம்  புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறும் மாதமாக இருக்கப் போகின்றது. ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் இருக்கும் நீச்ச சுக்கிரன் கடக ராசியினருக்கு நல்லவை செய்யும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும்.

ஆகஸ்ட் 3-ம் தேதி புதன் வக்ர நிவர்த்தியாவதால் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். இழுபறியாக இருந்த பல காரியங்களை இந்த மாதத்தில் முடித்துக் காட்டுவீர்கள். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் மீண்டும் இணைவார்கள். வீட்டிற்கு ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப விரயங்கள் ஏற்படக்கூடும்.

உங்கள் ராசியில் சூரியனோடு ராகு இணைந்து இருப்பதால் ஏற்றமும் இறக்கமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 7, 8 அதிபதியான சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால் இல்லத்தில் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். உங்கள் வாழ்கை துணையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.  உங்கள் ராசிக்கு 5,10 அதிபதியான செவ்வாய் வக்ர இயக்கத்தில் கேதுவுடன் இருப்பதால் பிள்ளைகளால் பிரச்சனை உருவாகலாம்.

அலுவலகத்தில் கூடுதல் கவனமாக செயல்பட வேண்டும். பணிச்சுமை அதிகரிக்கும். உங்களுக்கு வருகின்ற வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகளை தட்டி கழிக்காமல் ஏற்று கொள்வது சிறப்பு. ஆகஸ்ட் 3, 4, 5 எதிர்பாராத நன்மை உண்டாகும்.  தொழில், வியாபாரம் சீராக நடைபெறும். கடக ராசிக்காரர்கள் வியாழக் கிழமையன்று தட்சிணாமூர்த்தியும், செவ்வாய்க் கிழமையன்று முருகனை வழிபட்டு வந்தால் தடைகள் அகலும்.

சிம்மம் ஆகஸ்ட் மாதம் ராசி பலன்கள் 2018:

Simmam august month rasi palan 2018

அன்புள்ள சிம்மம் ராசிக்காரர்களே, இந்த ஆகஸ்ட் மாதம் எச்சரிக்கையாக செயல்பட கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. குருவின் பார்வை 7, 9, 11 பதிவதால் இல்லத்தில் சுப நிகழ்ச்சி பேச்சு வார்த்தைகள் நடைபெறும். திருமண முயற்சி கைக்கூடி வரக்கூடும். ஒரு சில சிம்மம் ராசியினருக்கு இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை நல்லபடியாக முடிவடையும்.

உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உடலில் கட்டி, தோல் சம்மந்தமான உபாதைகள் வரக்கூடும். இல்லத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என்று கவலை படுவீர்கள்.  சொத்துகள் வாங்கும் முயற்சிகள் தள்ளிப் போகலாம். உங்கள் ராசிக்கு 6, 7 அதிபதியான சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் திடீர் மாற்றங்கள் உண்டாகலாம்.

உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஆகஸ்ட் 2-ம் தேதி கன்னி ராசிக்கு செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 10 அதிபதியான சுக்கிரன் கன்னி ராசியில் நீச்ச வீட்டில் இருப்பது சிறப்பான பலன்களைத் தராது. துணிந்து எதையும் செய்ய இயலாது. வேலைச்சுமை அதிகரிக்கும். புதிய வேலையை நம்பி பழைய வேலை விடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்பொய்ன்ட்மென்ட் ஆர்டர் கிடைத்தவுடன் புதிய வேலையில் சேரலாம்.

ஆகஸ்ட் 3-ம் தேதி புதன் வக்ர நிவர்த்தியாவதால்  தாரளமாக பணவரவு வரக்கூடும். உங்கள் ராசிக்கு 2, 11 அதிபதியான புதன் வக்ர நிவர்த்தியாகும்போது மாத தொடக்கத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பெற்றோர், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மேலும் சிம்மம் ராசிக்காரர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்க, தடைகள் அகல பிரதோஷ வழிபாடு செய்து வந்தால் நல்லவை நடைபெறும்.

கன்னி ஆகஸ்ட் மாதம் ராசி பலன்கள் 2018:

Kanni august month rasi palan 2018

அன்புள்ள கன்னி ராசிக்காரர்களே, இந்த ஆகஸ்ட் மாதம் புதிய முயற்சிகளால் வெற்றி பெறுகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் உத்தியோகம் சம்மந்தமாக எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஊர் மாற்றம், இடமாற்றம், விரும்பிய இடத்தில் வேலை அமையக்கூடும். ஆடம்பர வசதி பெருகும். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும்.

ஆகஸ்ட் 2-ம் தேதி உங்கள் ராசிக்கு 2, 9 அதிபதியான சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கின்றார். கன்னி ராசி சுக்கிரனுக்கு நீச்ச வீடாகும். நீச்ச சுக்கிரன் சஞ்சாரம் எதிர்பாராத மாற்றத்தைக் கொடுக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போக கூடும் என்பதால் சிந்தித்து பேசுங்கள்.  பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தாய்வழி ஆதரவு கிட்டும். உங்கள் பெயரில் மனை வாங்க முயற்சி செய்வீர்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்கால கனவு ஒன்று நனவாகும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும்.

உங்கள் ராசிக்கு மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் பகவான் ஆகஸ்ட் 3-ம் தேதி வக்ர நிவர்த்தியாவதால் இரட்டிப்பு லாபம் வரக்கூடும். தொழில், வியாபாரம் செய்கிறவர்களுக்கு புதிய யுக்திகளைப் பயன்படுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். ஆரோக்கிய தொல்லை அகலும்.

உங்கள் ராசிக்கு 5,6 அதிபதியான சனி நான்காம் வீட்டில் வக்ர இயக்கத்தில் இருப்பதால் உடன் பிறந்தவர்களிடம் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். மூன்றாம் நபரின் தூண்டத்தலின் பேரில் உறவு பகையாகும். உங்கள் ராசிக்கு 3, 8  ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருப்பதால் பூர்வீக சொத்துகள் சம்மந்தப்பட்ட பாகப்பிரிவினையில் தாமதம் ஏற்படலாம்.

துலாம் ஆகஸ்ட் மாதம்  ராசி பலன்கள் 2018:

Thulam august month rasi palan 2018

அன்புள்ள துலாம் ராசிக்காரர்களே, இந்த ஆகஸ்ட் மாதம் எதிர் நீச்சலை போட்டு இலக்கை அடைகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் பகவான் ஆகஸ்ட் 3-ம் தேதி வக்ர நிவர்த்தியாவதால் புதிய வேலையில் சேருவதற்கான வாய்ப்புகள் வரலாம். ஒரு சிலர் பழைய வாகனத்தை விற்று புதிய வாகனத்தை வாங்குவீர்கள். பூர்வீக சொத்துகள் சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். இது போன்ற காலங்களில்  எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி கிட்டும்.

ஆகஸ்ட் 2-ம் தேதி உங்கள் ராசிக்கு மற்றும் 8-ம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கின்றார். கன்னி ராசி சுக்கிரனுக்கு நீச்ச வீடாகும். ராசிநாதன் நீச்சம் அடைவதால் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். மனதில் தடுமாற்றம் தோன்றக்கூடும் என்பதால் தைரியமாக, தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுக்கிரன் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டிற்கு அதிபதி வலிமை இழப்பதால் நல்லவை நடைபெறும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.கணவன் மனைவி இடையே அந்யோன்யம் அதிகரிக்கும்.

செவ்வாய், சனி இரு கிரகங்களும் வக்ர இயக்கத்தில் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் திருப்பதி ஏற்படாது. கல்யாண வாய்ப்பு கைநழுவி செல்லலாம். சூரியன்- ராகு சேர்க்கைக்கு சர்ப்ப சாந்தி பரிகாரம், ஜென்ம குருவிற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு, வக்ர செவ்வாய்க்கு முருகன் வழிபாடு, ராசிநாதன் நீச்சமாக இருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொண்டால் பாதக நிலை மாறும். மாதம் முற்பகுதியை விட பிற்பகுதியில் அதிக அளவில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம் ஆகஸ்ட் மாதம்  ராசி பலன்கள் 2018:

Viruchigam august month rasi palan 2018

அன்புள்ள விருச்சிகம் ராசிக்காரர்களே, இந்த ஆகஸ்ட் மாதம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும் மாதமாக இருக்கப் போகின்றது. விருச்சிகம் ராசியினருக்கு இந்த ஆகஸ்ட் மாதம் ஒரு இனிய மாதமாக இருக்கப் போகின்றது. பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும் குரு உங்கள் ராசிக்கு 4,6,8 ஆகிய இடங்களில் பார்வை பதிவதால் வாகனம் வாங்கும் யோகம் அமையக்கூடும். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். அலுவலகத்தில் பணிபுரிகின்றவர்களுக்கு செல்வாக்கு கூடும். உங்கள் திறமை பளிச்சிடும். உங்கள் திறமைக்காக அலுவலகத்தில் முக்கியத்துவம் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 9,12 அதிபதியான புதன் பகவான் ஆகஸ்ட் 3-ம் தேதி வக்ர நிவர்த்தியாவதால் திடீர் முன்னேற்றம் ஏற்படும். சேமிக்க தொடங்குவீர்கள். வராத பாக்கி வசூலாகும். சகோதர, சகோதரியின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றலா செல்வீர்கள்.

ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கின்றார். கன்னி ராசி சுக்கிரனுக்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 7,12 அதிபதியான சுக்கிரன் நீச்ச வீட்டில் இருக்கும்போது செலவுகள் அதிகரிக்கும். வீட்டு பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒரு பக்கம் பொருளாதாரம் உயர்ந்தாலும் செலவுகள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

தொழில், வியாபாரம் படிப்படியாக உயரும். பகைவர் தொல்லை  அதிகரித்தாலும் திறம்பட சமாளிப்பீர்கள். ஆகஸ்ட் 6, 7, 12, 13 ஆகிய நாட்களில் இனிய அனுபவம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் மற்றும் ஆறாம் வீட்டின் அதிபதியான செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால் சனிக்கிழமை அனுமனை வழிபட்டு வந்தால் தொழில் வளம் சிறக்கும்.

தனுசு ஆகஸ்ட் மாதம் ராசி பலன்கள் 2018:

Dhanusu august month rasi palan 2018

அன்புள்ள தனுசு ராசிக்காரர்களே, இந்த ஆகஸ்ட் மாதம் தடுமாறினாலும் முன்னேற்றம் காணும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் குரு லாப வீட்டில் இருப்பதால் பொருளாதார வளம் கூடும். தொழில், வியாபாரத்தில் கணிசமான லாபத்தை பெறுவீர்கள். அலுவலகத்தில் செல்வாக்கு கூடும். வீடு, மனை வாங்குவதில் தாமதம் ஏற்படலாம். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 6,11 அதிபதியான சுக்கிரன் நீச்சம் அடைந்துள்ளதால் நற்பலன்களைக் கொடுப்பார். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். இதுவரை பலமுறை போட்டி தேர்வுகள், நேர்முக தேர்வுகளில் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லையே என்று இருந்தவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

உங்கள் ராசிக்கு 7,10 அதிபதியான புதன் ஆகஸ்ட் 3-ம் தேதி வக்ர நிவர்த்தியாவதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் பெருகும். புதன்  வலிமை பெறுவதால் நீங்கள் செய்யும் முயற்சிகள் நற்பலன்களை தரக்கூடும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கனவுகள் நனவாகும். திருமண பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும்.

உங்கள் ஜென்மத்தில் இருக்கும் சனி பகவான் வக்ரம் பெற்றுள்ளதால்  பிள்ளைகளால் சில விரயங்களை சந்திக்க நேரிடும். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய் வக்ரத்தில் இருப்பதால் உடன்பிறப்புகள் பகையாகலாம். யோசித்துப் பேசுங்கள். ஆகஸ்ட் 6, 7, 14, 15, 24, 28, 29 நாட்களில் எதிர்பாராத வகையில் தனலாபம் உண்டாகும்.

மகரம் ஆகஸ்ட் மாதம் ராசி பலன்கள் 2018:

Magaram august month rasi palan 2018

அன்புள்ள மகரம் ராசிக்காரர்களே, இந்த ஆகஸ்ட் மாதம் சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் பெறுகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிக்கு 6, 9 அதிபதியான புதன் ஆகஸ்ட் 3-ம் தேதி வக்ர நிவர்த்தியாவதால் நல்லவை நடைபெறும். தந்தைவழி சொந்த பந்தங்களால் ஆதரவு உண்டாகும். பூர்வீக சொத்து சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல விதமாக முடிவுபெறும். உறவினர் மத்தியில் ஏற்பட்ட விரிசல் மறையும். ஒரு சிலருக்கு பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத வகையில் மாற்றங்கள் உண்டாகும்.

ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 5,10 அதிபதியான சுக்கிரன் நீச்சம் அடைந்து உள்ளதால் சிறப்பான பலன்களை தராது. பிள்ளைகளால் விரயங்கள், பிரச்சனைகள் ஏற்படக்கூடும். திடீரென்று பழக்கமாகும் நபர்களிடம் வீண் விரோதம் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழக வேண்டும். யாரையும் நம்பி வீட்டு விஷயங்களை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம்.

பணிபுரியும் இடத்தில் தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் போன்றவற்றில் போட்டிகள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். உங்கள் மதிப்பும், மரியாதையும் குறையாது என்றாலும் மன  நிம்மதி குறைவாகவே இருக்கும். செய்யும் காரியங்களில் முழு கவனத்துடன் செயல்படுங்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் அதிக முதலீடு செய்வதற்கு முன்பு அனுபவமிக்கவர்கள் ஆலோசனைகளை ஏற்பது அவசியம்.

ஏழரைச் சனி ஆதிக்க காலத்தில் இருப்பதால் பொருள் இழப்பது, தடைகள், தாமதம், வெளியூர் பயணம் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கும் இரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால்  நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய முடியாது. உங்கள் ராசியில் செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். ஆகஸ்ட் 10, 11, 16 சிறப்பான நாட்களாக அமையும்.

கும்பம் ஆகஸ்ட் மாதம் ராசி பலன்கள் 2018:

Kumbam august month rasi palan 2018

அன்புள்ள கும்பம் ராசிக்காரர்களே, இந்த ஆகஸ்ட் மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதமாக இருக்கப் போகின்றது. சென்ற மாதங்களில் நடைபெறாத விஷயங்கள் இந்த மாதத்தில் நடைபெறப் போகின்றது. கல்யாண கனவு நனவாகும். பொருளாதாரம் உயரும். குருவின் பார்வை 3, 5 இடங்களில் பதிவதால் சகோதர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னதமான நேரம். தொழில், வியாபாரம் போன்றவற்றில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரக்கூடும். சுய தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். ஆகஸ்ட் 10, 11, 12, 13 திடீர் பணவரவு உண்டாகும். விருந்து, விழா போன்றவற்றில் கலந்து கொள்வீர்கள்.

ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 அதிபதியான சுக்கிரன் நீச்சம் அடைந்துள்ளதால் சிறப்பான பலன்களை தராது. ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். ஒரு சிலருக்கு வாகனம் பழுதாகும். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உங்கள் மேற்பார்வையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் இருக்கும்போது வீண் அலைச்சல்,  நண்பர்களாக இருப்பவர்கள் திடீர் பகைவர்களாக மாறுவார்கள். இதுபோன்ற காலங்களில் கவனமாக இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கு 5, 8 அதிபதியான புதன் ஆகஸ்ட் 3-ம் தேதி வக்ர நிவர்த்தியாவதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். படித்து முடித்து வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். உங்கள் ராசிநாதன் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் தொல்லை அதிகரிக்கும். மறைமுக எதிரிகள் தோன்றினாலும் ராகுவால் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.

மீனம் ஆகஸ்ட் மாதம் ராசி பலன்கள் 2018:

Meenam august month rasi palan 2018

அன்புள்ள மீனம் ராசிக்காரர்களே, இந்த ஆகஸ்ட் மாதம் அதிரடி முடிவுகளால் முன்னேற்றம் அடைகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது விசேஷ 7-ம் பார்வை சிறப்பாக இருக்கின்றது. குருவின் ஏழாம் வீட்டின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் விழுவதால் பணப் புழக்கத்திற்கு எந்த குறைவும் இருக்காது. பணி புரிகின்றவர்கள் அலுவலகத்தில் சீரான வளர்ச்சி காண்பர். பணிச்சுமை இருந்தாலும் சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையேதுமில்லை. வியாபாரம் செய்பவர்கள் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி லாபத்தை பெருக்குவீர்கள்.

ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 அதிபதியான சுக்கிரன் நீச்சம் அடைந்து ஒரு விதத்தில் நற்பலன்களை கொடுக்கும். அஷ்டமாதிபதி நீச்சம் அடைவது நற்பலன்களை கொடுக்கும். எதிர்பாராத வகையில் சில காரியங்கள் துரிதமாக நடைபெறும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

உங்கள் ராசிக்கு 4, 7அதிபதியான புதன் ஆகஸ்ட் 3-ம் தேதி வக்ர நிவர்த்தியாவதால் மாற்றங்கள் நிகழும். நீண்ட காலமாக இருந்துவந்த சொத்து சம்மந்தமான பாகப் பிரிவினை ஒரு முடிவுக்கு வரக்கூடும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அந்யோன்யம் அதிகரிக்கும். கல்விக்காக எடுத்த முயற்சியில் இருந்த தடைகள் அகலும்.

உங்கள் ராசிக்கு 2, 9 அதிபதியான செவ்வாய் வக்ரம்  பெற்று கேதுவுடன் இணைந்து இருப்பதால் வர வேண்டிய தொகை கைக்கு வர தாமதம் ஏற்படலாம். மொத்தத்தில் மீனம் ராசியினருக்கு இந்த ஆகஸ்ட் மாதம் மாற்று யோசனையால் முன்னேற்றம் அடைகின்ற மாதமாக இருக்கப் போகின்றது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top