இனி அத்திவரதர் இருக்கபோகும் இடம் எதுவென தெரியுமா?!

காஞ்சி மாநகரில் வரதராஜப்பெருமாள் கோவிலில் இருக்கும் அனந்த சரஸ் திருக்குளத்து நீருக்கடியில் சயனித்திருக்கும் அத்திவரதர் சிலாரூபம், நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுக்கப்பட்டு, 48 நாட்களுக்கு அருகிலிருக்கும் மண்டபத்தில் பொதுமக்கள் தரிசனத்துக்காக வைப்பது வழக்கம்.

அதன்படி, கடந்த ஜுலை 1 லிருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதலில் சயனக்கோலத்திலும் ஆகஸ்ட் 1லிருந்து நின்ற கோலத்திலும் அருள்பாலித்து வந்த அத்திவரதர் தரிசனம் வரும் ஆகஸ்ட் 17வரை அருள்பாலிப்பார் என சொல்லி வந்த நிலையில் சில ஆகமவிதிகளை பின்பற்றவேண்டிய காரணத்தினால் ஆகஸ்ட் 17தேதி அன்று பொதுமக்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகமவிதிகள் நிறைவேற்றப்பட்டு, அத்திவரதர் சிலை மீண்டும் , வெள்ளிப்பெட்டியில் வைக்கப்பட்டு அனந்த சரஸ் திருக்குளத்து நீரினுள் வெள்ளிப்பெட்டி வைக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.