அத்திவரதர் தரிசனத்தில் நாளை நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது..

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருக்குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர், ஜுலை 1 தேதியிலிருந்து அருள்பாலித்து வருகிறார். இவரை லட்சக்கணக்கான மக்கள் தரிசித்து வருகின்றனர்.

அத்திவரதர் தரிசனம் முடிய இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், கருடசேவையை முன்னிட்டு நாளைய தினம், அதாவது வியாழக்கிழமை (15/8/2019) மாலை 5 மணியோடு பொதுமக்களுக்கான தரிசன அனுமதி நிறுத்தப்படும். அதன்பின் யாருக்கும் அத்திவரதர் தரிசனம் கிடையாது. பின்பு வழக்கம்போல் 16/8/2019 அத்திவரதர் தரிசனம் தொடங்கும் என கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.