அத்திவரதர் தரிசன நேரத்தில் இன்றும், நாளையும் மாற்றம்…

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்த சரஸிலிருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு அத்தி வரதர் காட்சி அளிப்பார். அதன்படி, திருக்குளத்திலிருந்து வெளியில் வந்து கடந்த பத்து நாட்களாக அத்தி வரதர் காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றார். தினசரி சராசரியாக ஒரு லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக, கடந்த சில நாட்களாக அத்தி வரதர் தரிசன நேரத்தை மேலும் சில மணி நேரங்கள் நீட்டிக்கப்பட்டது. அத்தி வரதரை நேற்றைய தினம் (10/6/2019) ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவிலில் இன்று(11/6/2019) ஆனி கருட சேவை நடைப்பெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேப்போல், நாளை(12/7/2019) அத்திவரதரை தரிசிக்க ஜனாதபதி ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வர உள்ளார். இதனை முன்னிட்டு நாளை பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரையில் பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்களது பயண திட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்ளவும்.