ஒழுக்கமாக இரு- நேரடியாக விஷாலை எச்சரித்த அருண்பாண்டியன்

ஊமை விழிகள், சிதம்பர ரகசியம் உள்ளிட்ட ஆரம்ப கால படங்களின் வழியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் அறிமுகமானவர் அருண்பாண்டியன். தொடர்ந்து இணைந்த கைகள், கோட்டை வாசல், ஊழியன்,தேவன்,ராஜமுத்திரை என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி அதிரடி ஹீரோவானார்.

இவரும் ஒரு தயாரிப்பாளர் அய்ங்கரன் இண்டர்நேஷனல் சார்பாக பல முக்கிய படங்களை தயாரித்துள்ளார். இவர் தவ்லத் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதாவது

முதலில் வியாபாரம் நடக்குமா நம்ம படம் ஓடுமா என முடிவு செய்து கொண்டு படம் எடுங்க பாகுபலி ரேஞ்சுல பிரமாண்டமா இருக்கும் என்ற நினைப்பில் எல்லாம் படம் எடுக்க வேண்டாம்.

விஷாலை நான் நேரடியாவே சொல்றேன். முதலில் நாம் ஒழுக்கமா இருக்கவேண்டும் என்னை வைத்து மூணு படம் பண்ண ஒரு ப்ரொட்யூசர் மதுசூதன ரெட்டி அவர் விஷாலை வைத்து அயோக்யா படத்தை தயாரிச்சுருக்கார். அவர் என்ன அவஸ்தை பட்ருக்கார்னு எனக்கு தெரியும் முதலில் நாம் ஒழுங்காக இருக்க வேண்டும் பின்புதான் மற்றவை என விஷாலை நேரடியாவே சொல்றனே என்று குறிப்பிட்டு கூறி இருக்கிறார் அருண்பாண்டியன்.