அருகம்புல்லின் மகிமை!

 

அருகம்புல்லின் மகத்துவம் நமக்குலாம் சொல்லித்தான் தெரியனும்ன்னு இல்ல. ஆனாலும், அருகம்புல்லின் மகிமையை எடுத்துச்சொல்லும்  செவிவழி கதை ஒன்னு இருக்கு.  அதை இன்னிக்கு பார்க்கலாம்.

 

”சுலபன்”ன்ற ராஜா “ஜம்பா”ன்ற நாட்டை  மனசாட்சிக்கும், தெய்வத்துக்கும் கட்டுப்பட்டு நல்லாட்சி புரிந்து வந்தான். அவனும், அவன் மனைவி சுபமுத்திரையும் தினமும் தங்கள் ஊரில் நடக்கும் கதாகாலட்சேபத்தைக் கேட்பது வழக்கம்.

அப்படி ஒருநாள் கதாகாலட்சேபம் நடக்கும் கோவிலுக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். சாமியாராச்சே! உடை விசயத்தில் அக்கறை செலுத்தாதால் கொஞ்சம் தாறுமாறா இருந்தது. எப்பவும் கருணை உள்ளத்தோடு இரக்கசுபாவியான ராஜா, விதிவசத்தால்  அந்த சாமியாரை பார்த்து சிரிச்சுட்டார்.

ஐயையோ! அப்புறம் என்ன ஆச்சு!?

ராஜாவோட சிரிப்பில் அவமானமடைந்த சாமியார் ஒரு மூலையில் போய் நின்றுக்கொண்டார். அப்படி அவர் நின்ற விதம்,   மீண்டும் விதிவசத்தால் ராஜாவுக்கு மற்படியும் சிரிப்பு வந்திட்டுது.

ராஜாவோட சிரிப்பை பார்த்து கோவம் தலைக்கேறிய சாமியார், ஏழ்மையில் வாடும் என்னப் பார்த்து சிரித்த நீ “எருதுவாக மாறு”ன்னு சாபம் விட்டுட்டார். ராஜாவும் எருமையாய் மாறிட்டார். அதை பார்த்த ராணி கோபங்கொண்டு, என் கணவரை எருதுவாக மாற சாபமிட்ட நீ “பொதி சுமக்கும் கழுதையாய் மாறு”ன்னு எதிர் சாபம் விட்டாங்க. என்னை கழுதையாய் மாற சொன்ன நீ “புல் சுமக்கும் ஏழைப்பெண்ணாய் மாறு”ன்னு பதிலுக்கு சாபமிட்டு கழுதையாய் மாறிட்டார் சாமியார்.

ஏழைப்பெண்ணாய் மாறிய ராணி, ஒருநாள் புல் அறுத்து மூட்டையா கட்டிக்கிட்டு வீட்டுக்கு போகும்போது பலமான காத்து வீசியது. காற்றிலிருந்து தப்பிக்க பக்கத்திலிருந்த பிள்ளையார் கோவிலுக்குள் புகுந்தாள். பலமா மழை பேய்ஞ்சுது.

மழைக்காக எருதுவா மாறின ராஜாவும், கழுதையா மாறின சாமியாரும் கோவிலுக்குள்ள வந்தாங்க. புல்கட்டை பார்த்ததும் கழுதையும், எருதும் சாப்பிட புல்கட்டை அந்த பொண்ணுக்கிட்ட இருந்து வாயால புடுங்குனாங்க. மூவருக்குள்ளும் பெரிய போராட்டம். அப்போ, மூட்டையிலிருந்த புல் பிள்ளையார்சிலை மீது விழுந்துச்சு. அது விநாயகர் சதுர்த்தி நாள். அதனால, கோவிலில் கூட்டம் வர ஆரம்பிச்சுது.

1b652cb4dcdece8aba9f334322e46e78

பூஜைநேரத்துல கோவிலுக்குள்ள வந்த கழுதையையும், எருதையும் விரட்டுனாங்க. அதுங்க ஓடும்போது புல்கட்டை இழுத்துட்டு போனதால, அந்த பொண்ணும் ஓடவேண்டியதாய்டுச்சு. இப்படியே கோவிலை மூணு முறை மூவரும் சுத்தி வந்தாங்க. அருகம்புல் அர்ச்சனையும், அந்த மூணு சுற்றையும் ஏற்று ஆனந்தமடைந்த பிள்ளையார் அவங்க மூணு பேருக்கும் சுய உருவத்தை கொடுத்து மோட்சத்தையும் கொடுத்ததாராம்.

தெரியாமல் செய்த அருகம்புல் அர்ச்சனைக்கே சாப விமோசனம் கிடைச்சுதுன்னா, தெரிஞ்சு செஞ்சா எத்தனை அளப்பறிய பலன்களை அடையலாம்ன்னு நினைச்சு பாருங்க. அதனால் எளிமையா, எங்கயும் கிடைக்கும் அருகம்புல்லினால் ஒருமாலை கட்டி பிள்ளையாருக்கு அணிவித்து அவனை மகிழ்வித்து மகிழ்வோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.