முகிலன் திருப்பதியில் கைது

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் போராளி முகிலன். சிறு வயதில் இருந்து பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். தமிழ்நாட்டின் ஹைட்ரோ கார்பன் திட்டம், கூடங்குளம் அணுக்கழிவு திட்டம், உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து போராடி வந்தார்.

முக்கியமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இவர் தொடர்ந்து போராடி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மாயமானார்.

முகிலனின் ஆதரவாளர்கள் பலர் சேவ் முகிலன் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

மாயமான இவரை கண்டுபிடிப்பதென்பது சவாலான காரியமாக இருந்த நிலையில் முகிலன் தாடி மீசையுடன் வேறு உருவத்தில் இருந்தார். அவரை கண்டுபிடித்த ஆந்திர போலீசார் இவர் தமிழ்நாடு போலீசால் தேடப்படுபவர் என கண்டறிந்து அவரை கைது செய்துள்ளனர்.