உலக அளவில் விருது வென்ற பியானோ சிறுவனை நேரில் சென்று பாராட்டிய ஏ.ஆர் ரஹ்மான்.

லிடியன் நாதஸ்வரம் என்ற யூ டியூப் பக்கம் ஒன்று உள்ளது. இதில் ஒரு சிறுவன் பலதரப்பட்ட இசைகளையும் பியானோவில் வாசித்து அசத்துகிறார்.இவர்தான் லிடியன் நாதஸ்வரம். உலக அளவில் சிறு வயதில் டிரம்ஸ் வேகமாக வாசிப்பதிலும், பியானோ வாசிப்பதிலும் இவர் சாதனை படைத்துள்ளார்.

உலக அளவில் சிறந்த சிறுவயது பியானிஸ்டாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மில்லியன் டாலர் பரிசு பெற்றுள்ளார் இவர்.

தன்னுடைய இசைப்பள்ளி ஆண்டு விழாவில் ஏ.ஆர் ரஹ்மான் இவரை மனம் திறந்து பாராட்டினார்.

வாழ்க்கையில் அதிசயமும் மந்திரமும் இருப்பதாக அவர் கூறினார். நான் லிடியாவை பார்க்கும்போது அது எனக்கு நம்பிக்கையளிக்கிறது. அவர் இந்தியாவின் இசைத்தூதராக இருப்பார் என்று நம்புகிறேன். லிடியனின் வெற்றி என்னுடைய வெற்றி போல உணர்கிறேன் என்று ரஹ்மான் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

இளையராஜா இசையமைத்த ஒரு பல பாடல்களை தனது பியானோவில் வாசித்து அசத்துபவர் இவர் .இவரின் வீடியோக்கள் இசைப்பிரியர்களிடையே பிரபலமானது.

4 வயதில் இருந்தே பியானோ வாசிப்பதில் ஆர்வம் உள்ள லிடியன் உலக நாடுகள் பலவற்றுக்கு சென்று வாசித்து சாதனை படைத்துள்ளார்.

சில ஆண்டுகள் கழித்து சந்திரனில் சென்று இவர் வாசிக்க வேண்டும் என்பது இவரது கனவாம்.

பல்வேறு இசைக்கோர்வைகளை மிக இயல்பாக வாசிக்கும் லிடியன் கனவு நிறைவேற வாழ்த்துவோம்.

இன்று ஏ.ஆர் ரஹ்மான் இவரை நேரில் சென்று பாராட்டி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

சந்திப்பின்போது ஏ.ஆர் ரஹ்மானின் பாடல் ஒன்றை நேரில் வாசித்து காண்பித்தார் லிடியன்.