தாளத்தால் ஆனது இந்த உலகம்- ரஹ்மான்

இயக்குனர் மணிரத்னத்திடம் ஒளிப்பதிவாளராக பம்பாய் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர் ராஜீவ் மேனன். பின்னாட்களில் ஏவிஎம்மின் பொன்விழா படமான மின்சார கனவு படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது. முதல் படத்திலேயே இப்படம் தேசிய விருதையும் வென்றது.

இவர் சில வருடம் கழித்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தை இயக்கினார்.

இப்படம் வந்து மிக மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு சர்வம் தாளமயம் படத்தை இயக்குகிறார்.

முழுக்க முழுக்க இசை இசை இசை மட்டுமே இப்படத்தின் முழு மூச்சாக சுவாசமாக கொண்டு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர் ரஹ்மான்.

படத்தின் சப்ஜெக்ட்டும் முழுக்க முழுக்க இசையை மட்டுமே அடிப்படையாக கொண்டதாகும். இசைக்காக உலகம் முழுவதும் வலம் வரும் வாலிபராக ஜிவி பிரகாஷ்குமார் நடிக்கிறார்.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் பல படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் மியூசிக்கல் சப்ஜெக்ட்டில் இசையமைப்பது இது இரண்டாவது முறை.

இதற்கு முன் கடந்த 1999ல் வந்த சங்கமம் படத்திற்கே ஏ.ஆர் ரஹ்மான் மியூசிக்கல் சப்ஜெக்ட்டில் முதல் முறையாக இசையமைத்தார்.

இப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இப்படத்தை பற்றி ரஹ்மான் அவர்கள் ஒரு டுவிட்டில் இவ்வாறு கூறியுள்ளார்.

தாளத்தால் ஆனது இந்த உலகம். தாளத்தை இரசிக்க செவிகளுக்கும் தாளத்தைப் படைக்க விரல்களுக்கும் யாராலும் தடைபோட முடியாது. சர்வம் தாளமயம்