Connect with us

பிரதமரின் கோரிக்கையை ஏற்ற அனுஷ்கா சர்மா

பொழுதுபோக்கு

பிரதமரின் கோரிக்கையை ஏற்ற அனுஷ்கா சர்மா

பிரபல ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மா.இவரது கணவர் விராத் கோஹ்லி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விளையாட்டு வீரர் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலில் வாக்களிப்போர் சதவீதத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் தேர்தல் கமி‌ஷன் இறங்கி உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் நடிகர்–நடிகைகளை இதில் ஈடுபடுத்தி வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. 

இதுபோல் பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி பிரபலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுகுறித்து டுவிட்டரில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர்கள் மோகன்லால், நாகார்ஜுனா, சல்மான்கான், அமீர்கான், நடிகைகள் அனுஷ்கா சர்மா, அலியாபட், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலருக்கு வேண்டுகோள் விடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குசதவீதம் அதிகரிக்க அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், வாக்களிப்பது உரிமை மட்டும் அல்ல கடமையும் கூட என்றும் தெரிவித்து இருந்தார். 
பிரதமரின் வேண்டுகோளை ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா ஆகியோர் ஏற்று உள்ளனர்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

பொழுதுபோக்கு

பீட்சாவுக்கு 7 வயது

To Top