இரண்டு ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் அனுஷ்கா படம்


ce3f4cc1d44bf5e024d4391ba4afc1e3

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்த அனுஷ்காஷெட்டி அதன் பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பாகிமதி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து அவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த திரைப்படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’நிசப்தம்’ என்ற படத்தில் அனுஷ்கா நடித்து வந்த நிலையில் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஹேமந்த் மதுக்கூர் இயக்கிய இந்த படத்தில் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அனுஷ்கா காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews