Connect with us

‘நாச்சியார்’ தெலுங்கு ரீமேக் படத்தில் அனுஷ்கா?

பொழுதுபோக்கு

‘நாச்சியார்’ தெலுங்கு ரீமேக் படத்தில் அனுஷ்கா?

ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவானா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘நாச்சியார்’ திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இதனையடுத்து இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தில் ஜோதிகா நடித்த காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நாச்சியார் படத்தை பார்த்த அனுஷ்கா, நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் ஜிவி பிரகாஷ், இவானா கேரக்டர்களில் நடிக்கவும் முன்னணி நடிகர், நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. நாச்சியார் கேரக்டர் ஜோதிகாவுக்கு செட் ஆகவில்லை என்று ஒருசிலர் விமர்சனம் செய்த நிலையில் அனுஷ்காவுக்கு இந்த கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top