பிறந்தநாள் அன்று ஓய்வு குறித்த அறிவிப்பு.. தோனி திட்டவட்டம்

12 வது உலகக்கோப்பைத் தொடர் இந்திய வீரர் தோனிக்கு மிக மோசமானதாக அமைந்தது. இந்த தொடரில் அவர் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்துடனே உள்ளனர். இதுவரை இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடியது. 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இதனால் தோனிக்கு எதிராக ரசிகர்கள் வலைதளங்களில் மோசமாக விமர்சனம் செய்து வந்தனர். சச்சின் இதுகுறித்து கருத்துகளை வலைதளங்களில் பதிவு செய்தார். இதனால் சச்சின் மற்றும் தோனி ரசிகர்களுக்கு இடையில் யார் பெரியவர் என்று சண்டை கிளம்பியது.

பிறந்தநாள் அன்று ஓய்வு குறித்த அறிவிப்பு.. தோனி திட்டவட்டம்

இந்த விமர்சனங்களால் இந்த உலகக் கோப்பை தொடரோடு தோனி ஓய்வு பெற போகிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

தோனியின் 38 வது பிறந்தநாள் நாளை 7 ஆம் தேதி வரவுள்ளது, இதனை கடந்த 3 நாட்களாகவே ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டவர் தோனி, இவருடைய 38 வது பிறந்த நாளன்று ஓய்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என செய்தி வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.