ரூ.20,000 ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.20,000 ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Civil Engineering பிரிவில் 21 பணியிடங்களும், Geo Informatics Engineering பிரிவில் 08 பணியிடங்களும், Mechanical Engineering பிரிவில் 04 பணியிடங்களும், Computer Science and Engineering / Information Technology பிரிவில் 05 பணியிடங்களும், Mathematics பிரிவில் 14 பணியிடங்களும், Physics பிரிவில் 06 பணியிடங்களும், English பிரிவில் 15 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

Civil Engineering, Geo Informatics Engineering, Mechanical Engineering மற்றும் Computer Science and Engineering / Information Technology பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். Mathematics, Physics மற்றும் English பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் எம்எஸ்சி, எம்.பில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

ரூ.20,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.annauniv.edu என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Additional Register and Director, Centre for Constituent Colleges, Anna University, Chennai 600 025

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.annauniv.edu/pdf/Recruitment%20of%20Teaching%20Fellows.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 18.06.2019