Connect with us

கொரோனா தனிமைப்படுத்தும் மையம்: அண்ணா பல்கலை திடீர் பல்டி

செய்திகள்

கொரோனா தனிமைப்படுத்தும் மையம்: அண்ணா பல்கலை திடீர் பல்டி

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை கொரோனோ தடுப்பு மையமாக மாற்ற ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கடிதம் எழுதியது.

இந்த கடிதத்திற்கு பதில் அளித்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மாணவர் விடுதியில் ஏற்கனவே மாணவர்களின் பொருட்கள் இருப்பதால் அந்த விடுதியை கொரோனா மையமாக மாற்ற தர முடியாது என்றும் அதற்கு பதிலாக வேறு கட்டிடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது

இதனை அடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென அண்ணா பல்கலைக்கழகம் தற்போது மாணவர் விடுதியை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

இதனை அடுத்து விடுதிகளை உடனே காலி செய்யுமாறு மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதியை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் விடுதியை ஒப்படைக்க ஒப்புக்கொள்வதாகவும், ஆனால் மாணவர்கள் பாதுகாப்பாக தங்கள் ஊருக்கு செல்வதற்கான வசதிகளை சென்னை மாநகராட்சி செய்து தர வேண்டும் என்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோரிக்கை வைத்துள்ளார்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த திடீர் பல்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Continue Reading
To Top